பெண்களை நாய்களுக்கு விருந்தாக்கும் தாலிபான்கள்: கண்களை பறிக்கொடுத்த இளம் தாயாரின் கதறல்
கர்ப்பிணியாக இருந்த போது தாலிபான்களின் கொடூர சித்திரவதைக்கு இலக்கான இளம் தாயார் ஒருவர், ஆப்கானிஸ்தான் பெண்களின் எதிர்காலம் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டெல்லியில் வசித்துவரும் 33 வயதான Khatera, தாலிபான்களை எதிர்க்கும் பெண்களின் உடல்கள் நாய்களுக்கு விருந்தாகும் கொடூரங்கள் இனி அரங்கேறும் என்கிறார்.
தாலிபான்களுக்கு எதிராக குரல் எழுப்பியதாலையே, தமது இரு கண்களையும் இழந்ததாக கூறும் Khatera, தாலிபான் ஆதரவாளரும் சொந்த தந்தையுமே தமது இந்த அவல நிலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் காஸ்னி பிராந்தியத்தில் வசித்து வந்த Khatera கடந்த ஆண்டு தாலிபான்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் 8 முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக தாம் தப்பித்துக் கொண்டதாகவும் Khatera தெரிவித்துள்ளார். வேலை முடித்து அலுவலகத்தில் இருந்து திரும்பும் வழியில் மூன்று தாலிபான்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறும் Khatera, தமது அடையாள அட்டையை சோதித்தவர்கள் உடனே துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் தமது கண்கள் இரண்டையும் அவர்கள் சேதப்படுத்திவிட்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் நடந்த போது தாம் 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களை கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கும் தாலிபான்கள், சில நேரம் நாய்களுக்கு உடல்களை உணவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். Khatera தற்போது கணவன் மற்றும் குழந்தையுடன் இந்தியாவின் டெல்லியில் வசித்து வருகிறார்.