இரயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்! சிசிடிவி கமெராவில் பதிவான காட்சி
இந்தியாவில் தற்கொலைக்கு முயன்ற நபரை கண்டதும், இரயில் ஓட்டுனர் சாதூர்யமாக செயல்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
மும்பையில் உள்ள Sewri இரயில் நிலையத்தில் இருக்கும் தண்டவாளத்தில் இரயில் வருவதைக் கண்ட சுமார் 59 வயது மதிக்கத்தக்க நபர், தற்கொலை செய்து கொள்ள அந்த தண்டவாளத்தில் படுத்துள்ளார்.
அப்போது இதைக் கண்ட அங்கிருந்த பெண் பொலிசார் சிலர் அவரை காப்பாற்ற ஓடி வர, இரயில் ஓட்டி வந்த ஓட்டுனர் இதைக் கண்டு சாதூர்யமாக செயல்பட்டு, இரயிலை முன்னரே நிறுத்தினார்.
அதன் பின் பொலிசார் அந்த நபரை மீட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
#WatchVideo: #Women constable saves man from committing suicide on railway tracks at #Mumbai's #SewriStation @RPF_INDIA @rpfcr #News #WomenConstable #LifeSaving #News #India pic.twitter.com/8aYB9wz7Wk
— Free Press Journal (@fpjindia) December 29, 2021