ஆஸ்ட்ராசெனகா மீது கொலை வழக்கு: தடுப்பூசி பெற்ற ஆசிரியர் உயிரிழப்பைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை!
இத்தாலியில், ஆஸ்ட்ராசெனகா நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட ஆசிரியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின்மீது கொலை வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல நாடுகள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்துவதை நிறுத்திவிட்ட நிலையில், தங்கள் தடுப்பூசியில் பெரிய அளவில் பிரச்சினை ஒன்றும் இல்லை என அந்நிறுவனம் தொடர்ந்து கூறிவரும் நிலையிலும், இந்த செய்தி அந்நிறுவனத்துக்கு மற்றொரு பலத்த அடியைக் கொடுத்துள்ளது.
வடக்கு இத்தாலியிலுள்ள Biella என்ற நகரைச் சேர்ந்த Sandro Tognatti (57) என்னும் ஆசிரியர் கடந்த சனிக்கிழமை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்புக்கு காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், அரசு தரப்பு சட்டத்தரணிகள் ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் மீது கொலை வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


