கடலில் மிதந்த பெண்ணில் சடலம்! விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் உண்மைகள்
தனது சொந்தக்கார பெண்னை நகைக்காக கொலை செய்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
திடீரென காணாமல் போன பெண்
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் காரக்கோட்டை கிராமத்தில் வசித்த வந்தவர் தான் காணாமல் போன 63 வயதுடைய சுலோச்சனா.
இவருடைய கணவர் 10 ஆண்டுகளுக்கு முதல் இறந்துள்ளார். மற்றும் இவரது மகள் தனது கணவருடன் வேறொரு இடத்தில் வசிக்கின்றார்.
ஆகவே இவர் மட்டுமே அந்த கிராமத்தில் தனியாக வாழ்ந்துவந்துள்ளார்.
நடந்தது என்ன?
சுலோச்சனாவை கடந்த சில தினங்களாக காணாததால் அவரின் உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் விசாரணையை மேற்க்கொண்ட பொலிஸார், சுலோச்சனாவின் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ரமேஷ் தலைமறைவானதை கண்டுப்பிடித்து சந்தேகப்பட்டுள்ளனர்.
ஆகவே அவரை தொலைபேசியின் மூலம் தொடர்புக் கொண்ட பொலிஸாருக்கு பல தகவல்கள் தெரியவந்தன.
ரமேஷ் கூறிய விடயம் என்ன?
சுலோச்சனாவிடம் இருந்து நகைகளை திருடுவதற்காக பல நாட்களாக திட்டம் தீட்டியதாகவும் அதற்கான சிறந்த சந்தர்ப்பம் கிட்டியதாலும் நான் அதை பயன்படுத்திக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த முதலாம் திகதி சுலோச்சனாவை தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அருகில் உள்ள கடற்கரைக்கு அழைத்து சென்று கழுத்து காது என பல பாகங்களை கத்தியால் அறுத்து 30 சவரன் நகைகளை திருடி மேலும் சுலோச்சனாவையும் படுக்கொலை செய்து கடலில் தூக்கி எறிந்துவிட்டு தப்பியோடியதாக ரமேஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர் ரமேஷின் நண்பரான செந்தில் குமாரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தின் ஒப்படைத்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் ரமேஷை பொலிஸார் தேடி வருகின்றனர்.
தனது சொந்தக்காரரை கொலை செய்ததால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.