அமெரிக்காவில் 22 பெண்களை கொன்ற கொலையாளி! சிறையில் சக கைதியால் கொலை
அமெரிக்காவில் பல பெண்களை கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி, சக கைதியினால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கர கொலையாளி
டெக்ஸாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் வயதான பெண்களை குறி வைத்து, அவர்களை கொலை செய்துவிட்டு மதிப்புமிக்க பொருட்களை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டவர் பில்லி செமிர்மிர் (50).
கடந்த 2018ஆம் ஆண்டு இவரது தாக்குதலில் இருந்து தப்பிய 91 வயது மூதாட்டி, குடியிருப்பில் நுழைந்து தலையணையை வைத்து பில்லி தன்னை கொல்ல முயன்றதாகவும், நகைகளை எடுத்துச் சென்றதாகவும் பொலிசாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து மறுநாள் லு தி ஹாரிஸ் (81) என்பவரின் மரணத்திற்கு பில்லி தான் காரணம் என கண்டறிந்த பொலிஸார், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
AP
சிறையில் அடைப்பு
டல்லாஸ் பகுதி முழுவதும் பொலிஸார் இறப்புகளை மறுபரிசீலனை செய்தனர். இதில் பில்லி மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்தது.
அவர் 22 பெண்களை கொலை செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதில் 13 குற்றச்சாட்டுக்கள் டல்லாஸ் பகுதியிலும், 9 குற்றச்சாட்டுக்கள் கொலின் நகரிலும் நடந்ததாக பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டென்னஸி காலனியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட பில்லி செமிரமிருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
(Shafkat Anowar / Staff Photographer)
சக கைதியால் கொலை
இந்த நிலையில் பில்லி செமிர்மிர் தனது அறையில் இறந்து கிடந்துள்ளார். சக கைதி ஒருவரால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அவரது அடையாளத்தையோ, அவர் எப்படி கொலை செய்தார் என்பதையோ வெளியிட முடியவில்லை என டெக்ஸாஸ் குற்றவியல் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் ஹன்னா ஹேனி தெரிவித்துள்ளார்.
மேலும், காவல் ஆய்வு ஜெனரல் அலுவலகம் பில்லி செமிர்மிரின் மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொலைக்குற்றவாளி சிறையில் சக கைதியினால் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |