சிறைபிடித்ததாக பாகிஸ்தான் கூறிய பெண் விமானியுடன் ரஃபேலில் பயணித்த ஜனாதிபதி முர்மு
சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கியதாக கூறப்பட்ட இந்திய விமானப்படை விமானியுடன் ஜனாதிபதி முர்முவின் புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட
சிந்தூர் நடவடிக்கையின் போது ரஃபேல் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் விமானி படைத் தலைவர் ஷிவாங்கி சிங் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் அங்குள்ள ஊடகங்களால் பரபரப்பாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா தரப்பில் விளக்கம் ஏதும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், புதன்கிழமை பகல் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி முர்முவுடன் ஷிவாங்கி சிங் காணப்படும் புகைப்படம் ஒன்று கவனத்தை ஈர்த்து வருகிறது.
இருவரும் புதிய ரஃபேல் விமானத்தில் பயணித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ரஃபேல் விமானத்திற்கான ஒரே ஒரு பெண் விமானி இவர் மட்டுமே.

சிந்தூர் நடவடிக்கை
ஷிவாங்கி சிங் தொடர்பில் பாகிஸ்தான் அப்போது வெளியிட்ட தகவல்களுக்கு இந்திய இராணுவம் விளக்கம் அளிக்கவில்லை என்பதுடன், மறுப்பும் தெரிவிக்கவில்லை. கடந்த மே மாதம் நடந்த சிந்தூர் நடவடிக்கையின் போதே ஷிவாங்கி சிங் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அத்துடன், ரஃபேல் உட்பட இந்திய விமானப்படையின் 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. வெளிநாட்டு நிபுணர்கள் சிலரும் இழப்பு நேர்ந்திருக்கலாம் என இந்த விவகாரத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் ஷிவாங்கி சிங் தொடர்பில் குறிப்பிடவில்லை என்பதுடன், அதன் பின்னர் அவர் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. தற்போது முதல் முறையாகவே, ஷிவாங்கி சிங் தொடர்பில் ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |