கறி சுவையை மிஞ்சும் வகையில் காளான் பிரியாணி.., இலகுவாக செய்யலாம்
காளான் பிரியாணி என்பது தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு ஆகும்.
மாதத்திற்கு இரண்டு முறை காளான்களை உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் இது புரதத்தின் சிறந்த மூலமாகும்.
அந்தவகையில், சுவையான காளான் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி- 1 கப்
- பூண்டு- 5 பல்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சைமிளகாய்- 2
- தேங்காய் துருவல்- 1 ஸ்பூன்
- மிளகாய் பேஸ்ட்- 1 ஸ்பூன்
- புதினா இலை- சிறிதளவு
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- காளான்- 400g
- நெய்- 2 ஸ்பூன்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- பட்டை- 1
- கிராம்பு- 3
- ஏலக்காய்- 2
- பிரிஞ்சி இலை- 1
- நட்சத்திர பூ- 1
- வெங்காயம்- 3
- தக்காளி- 3
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய், மிளகாய் பேஸ்ட், கொத்தமல்லி, புதினா சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
பின் அரிசியை 3 முறை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் அரைத்து மசாலா சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
இதனையடுத்து தக்காளி சேர்த்து நன்கு வதங்கி வந்ததும் இதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கி காளான், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
காளான் நன்கு வெந்ததும் இதில் ஊறவைத்த அரிசி 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 1 வீசில் வந்ததும் 5 அடுப்பை அனைத்து 5 நிமிடம் கழித்து திறந்தால் சுவையான காளான் பிரியாணி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |