விமானப் பயணத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தப்போகும் எலன் மொஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ் எனும் திட்டத்தின் மூலம் விண்வெளி ஓடங்களை அனுப்பும் சேவையை எலன் மொஸ்க் செய்து வருகின்றார்.
இது ஒரு தனியார் சேவையாக இருப்பதுடன் நாசா விண்வெளி ஆய்வு மையமும் இத் திட்டத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.
இந்நிலையில் பயணிகள் மற்றும் சரக்கு விமான சேவையிலும் புதிய புரட்சி ஒன்றினை ஏற்படுத்துவதற்கு எலன் மொஸ்க் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி Super Heavy Booster எனும் குறைந்த உயரத்தில் பறக்கக்கூடிய விமானங்கள் தொடர்பான பரீட்சிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு குறைந்த உயரத்தில் பறப்பதனால் எரிபொருள் செலவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானங்கள் இன்னும் சில மாதங்களில் சேவைக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.