மொத்தமாக சிதைக்கப்பட்ட உடல்கள்... காஸா நிர்வாகத்திடம் ஒப்படைத்த இஸ்ரேல்
இஸ்ரேலின் மிகக் கொடூரமான சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்களில், மொத்தமாக சிதைக்கப்பட்ட குறைந்தது 135 உடல்களை காஸா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளம்
காஸா சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் முனீர் அல்-பர்ஷ் மற்றும் உடல்கள் பரிசோதனை செய்யப்படும் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளரும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு சடலத்துடனும் இணைக்கப்பட்ட ஆவணத்தில், உடல்கள் அனைத்தும் Sde Teiman இராணுவத் தளத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் Negev பாலைவனத்தில் அமைந்துள்ள இராணுவத் தளம் இந்த Sde Teiman. இங்கேயே பாலஸ்தீன மக்கள் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, கைவிலங்கு போடப்பட்டு, மருத்துவமனை படுக்கைகளில் கட்டப்பட்டு, டயப்பர்கள் அணிய வேண்டிய கட்டாயத்திலும் தள்ளப்பட்டதாக கடந்த ஆண்டு ஆவணப்படம் ஒன்று வெளியானது.
சில சடலங்களை அடையாளம் காணும் பொருட்டு இஸ்ரேலில் டி.என்.ஏ சோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Sde Teiman இராணுவத் தளத்தில் கடந்த ஆண்டு 36 கைதிகள் மரணமடைந்த விவகாரத்தில் இஸ்ரேல் இராணுவம் விசாரணை முன்னெடுத்தது.
அமெரிக்கா இறுதி செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து ஹமாஸ் படைகள் தங்கள் வசமிருந்த பணயக்கைதிகளை ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து இஸ்ரேலும், அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் 150 சடலங்களை காஸா நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது.
இஸ்ரேல் இதுவரை ஒப்படைத்துள்ள சடலங்களில், பெரும்பாலானோர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். அவர்களின் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்தன. ஒருவரின் கழுத்தில் கயிறு கட்டப்பட்டிருந்தது.
உடல் நசுங்கிய
கான் யூனிஸ் மருத்துவர்கள் தெரிவிக்கையில், பல பாலஸ்தீன கைதிகள் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுடப்பட்டும், இஸ்ரேல் டாங்கிகளுக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கிய நிலையிலும் காணப்பட்டுள்ளனர்.
மேலும், பலர் தூக்கிலிடப்பட்டதற்கான அடையாளங்களுடன் காணப்படுகின்றனர். ஐ.நா வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய சிறைகளில் குறைந்தது 75 பாலஸ்தீனிய கைதிகள் இறந்துள்ளனர் என்றே தெரிய வருகிறது.
ஆனால் Sde Teiman இராணுவத் தளத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள சடலங்கள் தொடர்பில் பதிலளிக்க விரும்பவில்லை என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |