நாவூறும் சுவையில் நெய் மட்டன் சுக்கா: இலகுவாக எப்படி செய்வது?
அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன்.
மட்டன் கறி தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வகைகளில் செய்யலாம்.
அந்தவகையில், சுவையான நெய் மட்டன் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மட்டன்- 1kg
- நெய்- 6 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- காஷ்மீரி மிளகாய்- 8
- மல்லி- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- சீரகம்- 2 ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 4
- நட்சத்திர சோம்பு- 1
- காய்ந்த மிளகாய்- 4
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 3 பல்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் நெய் சேர்த்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மட்டன் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து 5 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் காஷ்மீரி மிளகாய், மல்லி, மிளகு, சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
பின் வறுத்த பொருட்களை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதில் இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் சேர்த்து அதில் அரைத்து வைத்திருந்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மட்டன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவை பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
இறுதியாக வேகவைத்த மட்டனை சேர்த்து 10 நிமிடம் நன்கு வறுத்து கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான நெய் மட்டன் சுக்கா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |