போராட்டக்காரர்களை ரப்பர் தோட்டாக்களால் சுட்டு தாக்கிய மியான்மர் இராணுவம்
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் மக்கள் மீது பொலிஸார் ரப்பர் தோட்டாக்களால் சுட்டு, கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மியான்மரில் ஜனநாயக ஆட்சியை மீட்டெடுக்கவும், கைது செய்யப்பட அரசு தலைவர் ஆங் சான் சூகி மற்றும் பிற அரசு அதிகாரிகளையும் விடுவிக்கக் கோரி, கடந்த நான்கு நாட்களாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற்னர்.
இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரின் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஒன்று கூடிய மக்கள், பல விதமான அறப்போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களும் வலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதனால் அந்நாட்டில், இரவு 8 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆர்பாட்டக்காரர்களை கலைக்க கடந்த 2 நாட்களாக தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று தலைநகர் Naypyidaw-வில் ஆர்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மக்கள் மீது ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்து சுட்டுள்ளனர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் பலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இன்று மாண்டலே நகரத்தில் மட்டும் குறைந்தது 27 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

