குழந்தைகள் உட்பட 91 பேரை சுட்டுக் கொன்ற மியான்மர் இராணுவம்: உலக நாடுகள் கண்டனம்!
மியானமரில் நேற்று ஒரே நாளில் 91 மக்களை சுட்டு கொன்றதற்கு எதிராக பல உலக நாடுகள் இராணுவ அதிகாரத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மியான்மரில் ஆயுதப்படை தினத்தையொட்டி நேற்று இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 91 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும், கொத்துக் கொத்தாக மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களில் பலர் சிறுவர் சிறுமிகள் என கூறப்படுகிறது.
இராணுவத்தன் இந்த கொடூர செயலுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட 12 உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
மேலும், மியான்மரில் உள்ள United Nation Mission, "இன்றைய நாள் ஆயுதப்படை தினம் அல்ல, நாடே 'இரத்தக்களரியான தினம்' என்று கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தின் தரப்பில், ஆர்பாட்டக்காரர்களில் சில போலீஸ் மற்றும் பாதுகாபப்பு படையினர் மீது துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாகவும், அதற்கு பதிலடிகொடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


