மியான்மரில் புத்தமத திருவிழாவில் குண்டு வீசிய இராணுவம்., 40 பேர் உயிரிழப்பு, 80 பேர் காயம்
மியான்மரில் நடைபெற்ற புத்தமத திருவிழா மற்றும் இராணுவ எதிர்ப்பு போராட்டத்தில் குண்டு வீசபட்டத்தில், 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய மியான்மரில் சாங் யூ நகரத்தில் தாதிங்க்யுட் பௌர்ணமி விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில், இராணுவம் பாராமோட்டார்களை (paramotor) பயன்படுத்தி குண்டுகள் வீசியதாக தேசிய ஒற்றுமை அரசு (NGU) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல், பொதுமக்கள் மீது இராணுவம் பாராமோட்டார்களை பயன்படுத்தும் புதிய ஆபத்தான போக்கை வெளிப்படுத்துகிறது.
விழா ஏற்பட்டு குழுவில் இருந்த பெண் ஒருவர், குழு எச்சரித்ததால் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தப்பியதாகவும், ஆனால், ஒரு பாராகிளைடர் கூட்டத்தின் மையத்தில் 2 குண்டுகளை வீசியதால் குழந்தைகள் உடல் பாகங்கள் சிதறியதாகவும் கூறியுள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு, மக்கள் காயமடைந்தவர்களுக்கு உதவ முன்வந்தனர். அனால் பல உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைந்திருந்தன.
Amnesty International இந்த தாக்குதலைத் தொடர்ந்து, மியான்மர் பொதுமக்களுக்கு அவசர பாதுகாப்பு தேவை என வலியுறுத்தியுள்ளது.
2021-ஆம் ஆண்டு இராணுவக் குடியுரிமை பறிப்பு நடந்ததிலிருந்து, மியான்மர் நாட்டில் குடியாட்சி ஆதரவாளர்கள் மற்றும் இனக்குழுக்கள் இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் எடுத்துள்ளனர்.
டிசம்பரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், ஜனநாயகத்தை மீட்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால், விமர்சகர்கள் தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது எனக் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |