பயங்கர ஆயுதங்களால் சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்த இராணுவம்! வெளியான நெஞ்சை பதற வைக்கும் படங்கள்
மியான்மரில் இராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்களுடனான மோதலில் அந்நாட்டு பாதுகாப்பு படையின் 25 கொன்று குவித்ததாக பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Sagaing பிராந்தியத்தில் உள்ள Depayin கிராமத்திலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பிப்ரவரி 1ம் திகதி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர் ஆங் சான் சூகி உட்பட பல அரசியல்தலைவர்களை சிறைப்பிடித்த அந்நாட்டு இராணுவ தளபதி, நாட்டில் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தினார்.
அன்று முதல் மியான்மர் முழுவதும் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், Depayin கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது பதுங்கியிருந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், 6 பேர் காயமடைந்தனர் என மியான்மர் அரசு ஊடகமான Global New Light of Myanmar செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்திய பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் பின்வாங்கினர் என Global New Light of Myanmar தெரிவித்துள்ளது.
ஆனால், சம்பவம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத Depayin கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர் கூறியதாவது, வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு இராணுவ லொறிகளில் பாதுகாப்பு படை கிராமத்தில் வந்திறங்கியது.
இராணுவ ஆட்சியை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட உள்ளூர் மக்கள் பாதுகாப்புப் படையின் இளைஞர்கள் பாதுகாப்பு படையினரை எதிர்கொள்ள முடிவு செய்தனர்.
இருப்பினும், அவர்களிடம் தரம் குறைந்தத ஆயுதங்கள் மட்டுமே இருந்தன, பயங்கர ஆயுதங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதால் உள்ளூர் மக்கள் பாதுகாப்புப் படையின் இளைஞர்கள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மோதல் முடிந்த பின்னர் மொத்தம் 25 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத Depayin கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசி தெரிவித்தார்.
Six more bodies have been found in Depayin as a result of gunfire by the military junta #WhatHappeningInMyanmar #HearTheVoiceOfMyanmar #RejectMyanmarMilitaryCoup #MilkTeaAlliance #ICRC pic.twitter.com/VHrWwXKz2g
— LinThomax (@LinThomax) July 4, 2021
ஆட்சி கவிழ்ப்பு முதல் மியான்மரில் இடம்பெற்று வரும் வன்முறை 2,30,000-க்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆட்சி கவிழ்ப்பிலிருந்து 880-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 5,200-க்கும் மேற்பட்டவர்கள் காவலில் உள்ளனர் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் உண்மை இல்லை என்று மியான்மர் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.