மேற்கு எல்லையில் அதிரடியாக முன்னேறும் மியான்மர் கிளர்ச்சிப்படை... உன்னிப்பாக கவனிக்கும் இந்தியாவும் சீனாவும்
மியான்மரின் மேற்கு எல்லைப் பகுதியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அரக்கான் இராணுவம் முன்னேறும் நிலையில், ரக்கைன் மாகாணம் ஒரு முக்கிய தருணத்தை எதிர்கொள்கிறது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அரக்கான் இராணுவம்
மியான்மரின் இராணுவ அரசாங்கம் நாட்டின் பிற இடங்களில் நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில், அரக்கான் இராணுவம் ரக்கைன் மாகாணத்தின் 17 நகரங்களில் 14 ஐ தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
ரக்கைன் மாகாணமானது மியான்மரின் மேற்கில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது மற்றும் வங்காளதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலையில், மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான வெற்றிகளிலிருந்து மீண்டு, அரக்கான் இராணுவம், தலைநகர் சிட்வே உட்பட ரக்கைன் மாகாணத்தின் எஞ்சிய பகுதியைக் கைப்பற்றுவதாக உறுதியளித்துள்ளது.
அத்துடன் முக்கிய இந்திய துறைமுகத் திட்டம், மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்வழிகளைக் கொண்ட கியூக்ஃபியூ மற்றும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் மையமான ஆழ்கடல் துறைமுகம் உள்ளிட்டவைகளைக் கைப்பற்றவும் அரக்கான் இராணுவம் திட்டமிட்டு வருகிறது.
இதனிடையே, அரக்கான் இராணுவத்தின் தீர்க்கமான தாக்குதலுக்கான வாய்ப்புகள் திறந்திருப்பதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், மியான்மரின் இராணுவ அரசாங்கத்திற்கு எதிரான சுயநிர்ணய உரிமைக்கான அரக்கான் இராணுவத்தின் போராட்டம்,
57 சதவீத குடும்பங்கள்
ஆழமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் ரக்கைனில் இஸ்லாமிய பெரும்பான்மை ரோஹிங்கியாக்களுக்கு எதிரான கடுமையான துஷ்பிரயோகங்கள் பற்றிய அதிகரித்து வரும் அறிக்கைகளுக்கு மத்தியில் வெளிவருகிறது.
இதனிடையே, மியான்மர் இராணுவம் ரக்கைனுக்கு பொருட்களை விநியோகிப்பதைத் தடுத்து நிறுத்தியிருப்பது, ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் வாடும் அபாயத்தை தூண்டியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், மத்திய ரக்கைனில் உள்ள 57 சதவீத குடும்பங்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்தது.
சுற்றி வளைக்கப்பட்ட சிட்வேயில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர், இப்பகுதி தற்போது கடல் மற்றும் வான் வழியாக மட்டுமே அணுகக்கூடியதாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |