புத்த கோவில்கள் நிறைந்த மியான்மர்! சுற்றுலா தளங்கள் ஓர் பார்வை
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் பர்மா என்றழைக்கப்படுகிறது, 1000க்கும் மேற்பட்ட புத்த கோவில்கள் நிறைந்துள்ள மியான்மர் பாரம்பரிய வரலாற்று சிறப்பு மிகுந்த நாடாகும்.
நவீன மற்றும் பண்டைய கால பொக்கிஷங்கள் நிறைந்த மியான்மரில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Shwemawdaw Paya
தங்கத்தால் மின்னும் கடவுளால் புகழ்பெற்றது Shwemawdaw Paya, சில மைல் தூரத்திற்கு இதன் ஜொலி ஜொலிப்பு இருக்கும், கோவிலின் வைரம் பதித்த கோபுரமும் இந்த ஜொலிப்புக்கு காரணமாகும், கிட்டத்தட்ட 375 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய புத்த கோவில் இதுவாகும்.
Ayeyarwady River Cruise
ஹிமாலயாவின் உச்சியில் தொடங்கி மியான்மர் வழியே அந்தமான் கடலில் கலக்கும் நதி இதுவாகும், மியான்மரின் மிகப்பெரிய நதியும் இதுவே.
Mandalay மற்றும் Bagan நகரங்களுக்கு இடையே நதியில் படகு பயணம் உங்களை மேலும் சுவாரசியமாக்கும் என்பதில் சந்தேகமில்லை, இந்நகரங்களில் புத்த மத கோவில்கள் நிறைந்துள்ளன.
இப்பயணத்தில் அழகான கிராமங்கள், டால்பின்கள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் என பல வியப்பூட்டும் அனுபவம் நிச்சயம் உண்டு.
calflier001 / Flickr
Shwenandaw Monastery
மியான்மரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த புத்த மடாலயம்.
முதலில் மாண்டலே அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதியாக அதாவது அரச குடியிருப்பாக இருந்து வந்தது.
ஆனால் அதில் அரசனின் ஆவி நடமாடுவதாக மகன் நம்பவே பின்னாளில் மடாலயமாக மாறியதாக சான்றுகள் கூறுகின்றன.
புத்த மதத்தின் தொன்மங்களை வெளிப்படுத்தும் வகையில் மடாலயத்தின் வெளிப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது, கல் போன்ற பிற பொருட்களால் செய்யப்பட்ட அலங்கார செதுக்கல்கள் காணப்படுகின்றன.
Ngapali
வசீகரிக்கும் வங்காள விரிகுடா கடற்கரையுடன் உங்களை வரவேற்கிறது Ngapali.
வெள்ளை நிற மணல், நீல நிற கடல் என மனதை ஒருநிலைப்படுத்தும் மீனவ கிராமத்தை நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை கண்டுகளிக்கலாம்.
sjdunphy / Flickr
Mrauk U
தொன்மையான நகரங்களில் ஒன்று Mrauk U, முதலில் இது ஒரு கோட்டையாக கருதப்பட்டாலும் பயங்கரமான காற்றிலிருந்து கோவில்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டது என தெரியவந்தது.
கற்கோவில்கள் அதிகம் நிறைந்துள்ள இந்நகரமே முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும், Kaladan River நதியில் நான்கு முதல் ஏழு மணிநேர படகு பயணத்தின் மூலம் இந்நகரை வந்தடையலாம்.
Inle Lake
மியான்மரின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று Inle Lake.
இதன் இயற்கை அழகையும் தாண்டி நதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாகின்றன.
படகு பயணம் முழுவதுமே மிதக்கும் தோட்டங்கள் உட்பட அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையும் பயணிகளை ஈர்க்காமல் இருக்கப்போவதில்லை.
Taung Kalat
அழிந்துபோன எரிமலை செருகின் மேல் கட்டப்பட்டுள்ள புத்த மடாலயம் இதுவாகும்.
சுமார் 777 படிகள் ஏறி மடாலயத்தின் உச்சியை சென்றடையலாம், அங்கிருந்து பண்டையகால நகரான Baganன் அழகை கண்டு ரசிக்கலாம்.
இதுமட்டுமின்றி எரிமலை செருகு உருவாவதற்கு காரணமாக இருந்த Popaவின் உச்சியையும் காணலாம்.
Shwedagon Pagoda
மியான்மரின் மிக புனித இடமாக கருதப்படும் இடங்களில் முக்கியமானது Greater Dragon Pagoda.
புத்தர்களின் பலரின் முடி மற்றும் பல கலாசார சின்னங்கள் இங்கு அமையப்பெற்றுள்ளன.
2500 ஆண்டுகள் பழமையான மடாலயம் இங்கு அமைந்துள்ளது, 8 மீற்றரில் இருந்து சுமார் 99 மீற்றர் வரை உயரம் கொண்டது இதுவாகும்.
கிபி 6 முதல் 10ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது, தங்க இழைகள் மற்றும் சுமார் 4532 வைரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வெறுங்காலுடன் அதற்குரிய ஆடை கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Golden Rock
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீற்றர் உயரம் கொண்ட இடத்தில் அமையப்பெற்றுள்ள Golden Rock பார்ப்போரை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்.
இருபக்கமும் தங்க இழைகளால் சூழப்பட்டுள்ள Golden Rock-யை புத்தர்களின் அதிசயமாக மக்கள் பார்க்கின்றனர்.
Yangon நகரிலிருந்து 5 மணிநேர பயணமாக புனித யாத்திரையாக மக்கள் இதனை வந்தடைகின்றனர்.
Bagan
உலகின் வேறெந்த நகரையும் விட அதிகளவிலான புத்த மத கோவில்கள், மடாலயங்கள் நிறைந்த இடம் Bagan.
9 முதல் 13ம் நூற்றாண்டுகளில் பர்மிய பேரரசின் தலைநகராக Bagan இருந்ததாக கூறப்படுகிறது.
11ம் நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட 11,000க்கும் அதிகமான புத்த கோவில்கள் இந்நகரில் இருந்ததாம்.
இதன் எச்சங்களை இன்னும் நகரில் பார்வையிடலாம், மிக முக்கியமாக தங்க கோபுரங்களை கொண்ட Ananda temple இங்குள்ளது நினைவுக்கூரத்தக்கது.