திருப்பதி ஏழுமலையானுக்கு 100 கிலோ எடையில் 2 வெள்ளி குத்துவிளக்குகளை வழங்கிய மைசூரு அரச பரம்பரை
திருப்பதி ஏழுமலையானுக்கு 100 கிலோ எடையில் 2 வெள்ளி குத்துவிளக்குகளை மைசூரு அரச பரம்பரையினர் வழங்கியுள்ளனர்.
100 கிலோ எடையில் வெள்ளி குத்துவிளக்கு
திருப்பதி ஏழுமலையானுக்கு 100 கிலோ எடையில் 2 அகண்ட வெள்ளி குத்துவிளக்குகளை மைசூரு அரச பரம்பரையை சேர்ந்த ராஜமாதா பிரமோதா தேவி காணிக்கையாக வழங்கினார்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மைசூரு மகாராஜா குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானுக்கு வெள்ளி குத்துவிளக்குகளை காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த குத்து விளக்குகள் தான் கர்ப்பகிரகத்தில் இருக்கும் சுவாமியின் இருபுறமும் எரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையானுக்கு வெள்ளி குத்துவிளக்குகள் வழங்கி 300 ஆண்டுகள் ஆகிவிட்டதால், நேற்று மைசூரு அரச பரம்பரையை சேர்ந்த ராஜமாதா பிரமோதா தேவி குடும்பத்துடன் வந்து வெள்ளி குத்துவிளக்குகளை காணிக்கையாக அளித்துள்ளனர்.
இதனை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு பெற்றுக் கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |