இந்தியாவில் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் எது தெரியுமா?
இந்தியாவில் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற சாதனையை படைத்துள்ள மாநிலம் எது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த மாநிலம்?
இந்தியாவில் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற சாதனையை மிசோரம் மாநிலம் படைத்துள்ளது. இந்த தகவலை மிசோரம் மாநில முதலமைச்சர் லால்டுஹோமா அறிவித்துள்ளார்.
மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் இந்த அறிவிப்பை மிசோரம் மாநில முதலமைச்சர் கூறினார்.
கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதமாக இருந்தது.
அப்போது இந்தியாவில் எழுத்தறிவு விகிதத்தில் மூன்றாவது மாநிலமான மிசோரம் இருந்தது குறிப்பிடதக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |