பிரான்சில் வெளிநாட்டு இளைஞர் மாயமான விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம்
பிரான்சில் மாயமான அமெரிக்க இளைஞர், ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுக் கல்வித் திட்டத்தில் பயின்றுவந்த மாணவர்
கென் (Ken DeLand Jr, 27) என்னும் அமெரிக்க இளைஞர், வெளிநாட்டுக் கல்வித்திட்டம் ஒன்றின்கீழ்,பிரான்சில் தங்கி கல்வி பயின்றுவந்தார்.
கடந்த மாதம் 27ஆம் திகதி கென் தான் தங்கியிருந்த வீட்டை விட்டு Valence என்ற இடத்துக்குச் செல்லும் ரயிலில் ஏறியுள்ளார். அதற்குப் பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.
அதனால் அவரது பெற்றோர் கவலைக்குள்ளான நிலையில், பிரான்ஸ் அதிகாரிகள் அவரைத் தீவிரமாக தேடிவந்தனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்
நேற்று கென் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக அவரது தந்தை தெரிவுத்துள்ளார். தன்னால் தன் மகன் உயிருடன் இருப்பதாக மட்டுமே கூறமுடியும் என்று கூறியுள்ளார் அவர்.
கென்னுடைய பெற்றோர் தங்கள் மகன் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், கென்னுடைய தாயாகிய கரோல், ஸ்பெயினுக்குச் சென்று மகனை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டுக்கு அழைத்துவரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
image - economictimes