கமெராவில் சிக்கிய ஆவி... விபத்து நடந்த இடத்தில் தோன்றிய மர்ம உருவம்
மெக்சிகோவில், சாலை விபத்து ஒன்றில் ஒருவர் பலியான நிலையில், அந்த விபத்தைக் காட்டும் புகைப்படம் ஒன்றில் மர்ம உருவம் ஒன்று தெரிவதைக் கண்ட மக்கள், அது ஒரு ஆவி என்று கூறியுள்ளார்கள்.
சாலை விபத்து
நேற்று முன்தினம், அதிகாலை நேரத்தில், மெக்சிகோவில் மின் கம்பம் ஒன்றில் கார் ஒன்று மோதிய விபத்தில், காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார், மற்றொருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
Credit: Jam Press
விபத்து நடந்த இடத்தில் தோன்றிய உருவம்
இந்த விபத்தைக் காட்டும் புகைப்படம் ஒன்றைக் கவனித்த மக்கள், அந்தப் புகைப்படத்தில், விபத்து நடந்த இடத்துக்கு சற்று தொலைவில், தூண் ஒன்றின் பின்னால் மர்ம உருவம் ஒன்று தெரிவதைக் கவனித்துள்ளார்கள்.
Credit: Jam Press
நீண்ட கருப்பு அங்கி அணிந்திருக்கும் அந்த உருவம், அமெரிக்கத் திரைப்படம் ஒன்றில் தோன்றும் கொலைகாரனைப் போல தோற்றமளிப்பதாக தெரிவிக்கிறார்கள்.
மற்றவர்களோ, அது நிச்சயம் ஒரு ஆவிதான் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Credit: Jam Press
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |