நேபாள சிகரத்தில் மாயமான மலையேற்ற வீரப்பெண் உயிருடன் மீட்பு!
மலையேறுவதை சிலர் தனது வழக்கமாக வைத்துள்ளனர். அதற்காக சில கற்கை மையங்களும் காணப்படுகின்றன. அவ்வாறு பயிற்சியெடுத்து பலர் மலையேறி சாதனை படைக்கின்றனர்.
அந்தவகையில் இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான பல்ஜீத் கவுர் என்பவர் உலகில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர்.
காணாமல்போன பெண்
இந்நிலையில் கடந்த சில நாட்களில் நேபாளத்தில் அமைந்துள்ள அன்னப்பூர்னா சிகரத்தில் தனியாக ஏறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, 8,091 மீட்டர் உயரம் கொண்ட அந்த மலையில் இருந்து அவர் இறங்க தொடங்கியுள்ள நிலையில் அவர் அடைய வேண்டிய முகாமுக்கு செல்லவில்லை. திடீரென மாயமாகியுள்ளார்.
Photo: Oswald Rodrigo Pereira
அதைதொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மூலம் அவரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. வானிலை மாற்றம் காரணமாக பணிகளும் தடைப்பெற்றன.
நேற்று அதிகாலை ரேடியோ அலைவரிசை மூலம் உடனடி உதவிக் கோறி அழைத்துள்ளார்.
அதை தொடர்ந்து தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அவர் மீண்டும் உயிருன் மீட்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo: Jonathan Lamy