கடலில் வானுயர திடீரென்று வெடித்துக் கிளம்பிய மர்ம தீ கோளம்
காஸ்பியன் கடலில் திடீரென்று வானுயர வெடித்துக் கிளம்பிய மர்ம தீ கோளம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
குறித்த மர்ம தீ கோளம் தொடர்பில் தற்போது அசர்பைஜான் அரசாங்கம் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
எரிமலை வெடிப்பாக இருக்கலாம் என கருதப்படும் இந்த வானுயர தீ கோளம் குறித்து புதிய சர்ச்சைகளும் கிளம்பியுள்ளது. அசர்பைஜான் கடற்பகுதியிலேயே இரவு நேரம் இந்த மர்ம தீ கோளம் வெடித்துக் கிளம்பியுள்ளது.
ஆனால், சமூக ஊடகங்களில், இது எண்ணெய் கப்பல் ஏதும் வெடித்திருக்கலாம் என்றே விவாதிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த அசர்பைஜான் காஸ்பியன் கப்பல் நிறுவனம், தங்கள் கப்பல்களில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, கடலுக்கடியில் கனன்று கொண்டிருந்த எரிமலை ஏதேனும் வெடித்திருக்க வாய்ப்பு என்றே அசர்பைஜான் அரசு எண்ணெய் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், பின்னர் அசர்பைஜான் அரசாங்க எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையானது திருத்தப்பட்டது. சம்பவம் நடந்த போது, காஸ்பியன் கடல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எந்த விபத்தும் ஏற்பட்டதாக பதிவாகவில்லை.
இதனால், கண்டிப்பாக அந்த வானுயர மர்ம தீ கோளம் எரிமலை வெடிப்பாக இருக்கவே வாய்ப்பு என சில நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த வானுயர தீ கோளத்தால் உமித் எண்ணெய் சேகரிப்பு நிலையத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இங்கு வழக்கமான பணிகள் தொடர்வதாகவும், அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மர்ம தீ கோளம் வெடித்துக் கிளம்பிய அதே நேரத்தில் பெய்லாகன் பிராந்தியத்தில் ஒரு சிறிய பூகம்பமும் பதிவாகியதாக கூறப்படுகிறது.