ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தன்னுடைய சீன சுற்றுப்பயணத்தை கவச ரயிலில் தொடங்கியுள்ளார்.
சீனாவுக்கு புறப்பட்ட கிம் ஜாங் உன்
புதன்கிழமை சீனாவில் நடைபெற இருக்கும் வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் திங்கட்கிழமை மாலை பியோங்யாங்கில் இருந்து தன்னுடைய கவச ரயிலில் புறப்பட்டார்.
Inside the armoured green train used by Kim Jong-un on his trip to China pic.twitter.com/C7djAnrGEC
— BBC News (World) (@BBCWorld) April 1, 2018
இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய பல உலக தலைவர்கள் கிம் ஜாங் உன் சந்திக்க உள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக பல்வேறு உலக தலைவர்கள் ஒரே நேரத்தில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சந்திக்க உள்ளார்.
கவச ரயில் பயணம்
சீனாவிற்கான கிம் ஜாங் உன்னின் பயண முறை அனைவராலும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. ஏனென்றால் வடகொரியாவிலிருந்து சீனாவிற்கு கிம் ஜாங் உன் ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில் வண்டியில் பயணிக்கிறார்.
Kim Jong-un's bulletproof limousine driving directly into his bulletproof train. pic.twitter.com/XnchK3fYmT
— HOW THINGS WORK (@HowThingsWork_) January 15, 2024
90 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், மாநாட்டு அறைகள், விருந்தினர் அறைகள், படுக்கையறைகள் மற்றும் ஆடம்பர உணவுகள் மற்றும் பிரெஞ்சு ஒயின்களை பரிமாறும் உணவகம் ஆகியவை உள்ளன.
வெறும் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லும் இந்த ரயில், 24 மணிநேரத்தில் சீனா சென்றடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
பாரம்பரிய ரயில் பயணம்
விரைவான விமான பயணத்திற்கு பதிலாக கிம் ஜாங் உன் ரயில் பயணத்தை தேர்ந்தெடுப்பதற்கான இந்த வழக்கம் கிம் இல் சுங்-கிடம் இருந்து தொடங்கியது.
இதன் பிறகு விமான பயணத்தில் பயம் இருந்ததால் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜோங் இல்-லும் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |