பெருந்திரளாக திமுகவில் ஐக்கியமான நாம் தமிழர் கட்சி தம்பிகள்! ராஜீவ்காந்தி சம்பவம்... பாராட்டி தள்ளிய மு.க ஸ்டாலின்
திமுக பிரமுகர் ராஜீவ்காந்தி ஏற்பாட்டில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகியாக இருந்தவர் ராஜீவ்காந்தி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகிய நிலையில் பின்னர் திமுகவில் சேர்ந்தார்.
தற்போது திமுகவில் தற்போது செய்தித் தொடர்பு இணைச் செயலராக இருந்து வருகிறார் ராஜீவ் காந்தி. அவரது ஏற்பாட்டில் நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3,000 பேர் இன்று திமுகவில் இணைந்தனர்.
திராவிட இனத்தின் தலைவர்
— Rajiv Gandhi (@rajiv_dmk) May 2, 2022
தமிழ்நாட்டின் முதல்வர் @mkstalin அவர்களின்
கரம் பற்றி “நாம்தமிழர்” தம்பிகள் பலர் இன்று கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்!! ?❤️ pic.twitter.com/uhnmMPy5l2
இதற்கான விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 3,000 பேரும் திமுகவில் இன்று இணைந்தனர்.
திமுகவில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜீவ்காந்தியின் செயல்பாடுகளை குறிப்பாக தொலைக்காட்சி விவாதங்களில் அவரது அணுகுமுறையை வெகுவாகப் பாராடினார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலர் திமுகவில் இணைந்துள்ள நிலையில் அது நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என ஒரு சாராரும், எந்த விளைவையும் ஏற்படுத்தாது என மற்றொரு சாராரும் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.