பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்து அல்லாதோர் நுழைய தடை
திண்டுக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் இந்து அல்லாதோர் நுழைய அனுமதி இல்லை என வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகையை தற்போதைய செயல் அலுவலர் நீக்கி விட்டார் என பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வழக்கு தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி பழனி முருகன் கோயிலில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.
அத்தோடு இந்து அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையையும் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
அம்பானியின் பிரமாண்ட ஜியோ வேர்ல்ட் டிரைவ் மால்: Jaguars, Audis, BMWs உட்பட 40 சொகுசு கார்கள் பறிமுதல்
இது தமிழகம் முழுவதும் மட்டுமின்றி உலக தமிழர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை கிளப்பி உள்ளது.
தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை
இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் X தளத்தில் அவர் பதிவிட்ட தகவலில், தமிழர் இறையோன், குறிஞ்சி நிலத் தலைவன், முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலுக்குள் சென்று வழிபட இந்து அல்லாத மக்களுக்கு அனுமதி மறுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்துள்ள தீர்ப்பு பெரும் அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது.
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்!@CMOTamilnadu@mkstalin
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 31, 2024
தமிழர் இறையோன், குறிஞ்சி நிலத் தலைவன், முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலுக்குள் சென்று வழிபட… pic.twitter.com/RCCzQVmCxk
மாற்று மதத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் தமக்கு விருப்பமான இறைவனை வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு எனும் நிலையில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாட்டில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில், சிக்கல் சிங்காரவேலன் கோயில் என்று அனைத்து மதத்தினரும், அனைத்து மத கோயில்களுக்கும் சென்று வழிபடக்கூடிய மரபணுவிலேயே மதநல்லிணக்கம் நிலைத்திருக்கும் தமிழ் மண்ணில், மனதிற்கு நெருக்கமான ஆண்டவனை வழிபட மனிதன் உருவாக்கியச் சட்டங்களால் தடை ஏற்படுத்துவது என்பது பிரிவினைக்கு வழிவகுத்து, மக்கள் மனங்களில் உள்ள மதப் பாகுபாடுகளை அதிகரிக்குமேயன்றி ஒருபோதும் குறைக்கப்போவதில்லை.
அதைத்தான் நீதிமன்றம் விரும்புகிறதா?மாண்பமை உயர்நீதிமன்றமே இதற்கு வழியேற்படுத்துவதுதான் வேதனையின் உச்சமாகும்.
ஆகவே, மக்கள் மனதில் மத வெறுப்பினை விதைக்க வழிவகுக்கும், பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதிக்கும் மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |