6 தொகுதிகளில் மூன்றாம் இடம்... மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காத நிலையில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மைக் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆனால், நாம் தமிழர் கட்சியானது 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது.
அதுவும் தஞ்சாவூரில் போட்டியிட்ட ஹுமாயூன் 1.50 லட்சம் வாக்குகள், சிவகங்கையில் போட்டியிட்ட எழிலரசி 1.63 லட்சம் வாக்குகள் பெற்றது தான் அதிகமான வாக்குகள் ஆகும்.
திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது. சில இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி வந்துள்ளது.
கன்னியாகுமரியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தையும், கள்ளக்குறிச்சியில் பாமகவை பின்னுக்கு தள்ளியும், திருச்சியில் அமமுகவை பின்னுக்கு தள்ளியும் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
குறிப்பாக 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. ஆனாலும், இந்த கட்சியானது அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து டெபாசிட்டை இழந்துள்ளது.
தேர்தல் ஆணைய அங்கீகாரம்
இந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது.
அதாவது, தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.5 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |