நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து வெற்றி! பல இடங்களில் இரண்டாமிடம்... கட்சியின் அபார எழுச்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று வெற்றிகளை பெற்று வரும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை கொண்டாடும் வகையில் கட்சியினர் டுவிட்டரில் டிரண்ட் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 19ஆம் திகதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆன்சி ஷோபா ராணி கன்னியாகுமரி மாவட்டம் கப்பியரை பேரூராட்சி முதல் வார்டில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
வெற்றிகளை குவிக்கும் நாம் தமிழர் கட்சி. ❤️?#RiseOfNTK pic.twitter.com/1T3hrtnGgf
— மோகன் தமிழன் (@mohankeech) February 22, 2022
அதே போல குமரி மாவட்டம், குளச்சல் தொகுதி கல்லுக்கூட்டம் பேரூராட்சி 10வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரூபன் பொன்னுமணி வெற்றி பெற்றுள்ளார். தற்போது வரை அக்கட்சியை சேர்ந்த 7 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்
மேலும் சில இடங்களை வெல்லும் நிலையில் இருக்கிறது, இதோடு பல இடங்களில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்பதை கொண்டாடும் வகையில் கட்சி தம்பிகள் #RiseOfNTK (நாம் தமிழர் கட்சியின் எழுச்சி) என்ற டேக்கை டுவிட்டரில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
#RiseOfNTK 7வது வெற்றியை பதிவு செய்தது நாம் தமிழர் கட்சி ??? #RiseOfNTK@thisisRaj_@Alavidrasamy@WolfsGhost
— HBD Dharshu ? / Karnan (@Peace25666743) February 22, 2022
pic.twitter.com/kyTEDYYI7i