பல பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசியை நினைவிருக்கா? ஆபாச வீடியோவை வெளியிட்ட வெளிநாட்டு நண்பர் சிக்கினார்
மீண்டும் சூடுபிடிக்கும் தமிழத்தை அதிரவைத்த நாகர்கோவில் காசி வழக்கு.
வெளிநாட்டில் இருந்த காசியின் நண்பர் கைது.
தமிழகத்தை உலுக்கிய நாகர்கோவில் காசி வழக்கில் வெளிநாட்டில் இருந்து ஆபாச வீடியோக்களை வெளியிட்ட அவரின் நண்பர் தற்போது சிக்கியுள்ளார்.
நாகர்கோவிலை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரின் மகன் காசி. இவர் சமூகவலைதளங்கள் மூலம் பெண்களை காதலிப்பதாக கூறி நேரில் சந்தித்து வன்கொடுமை செய்துள்ளார். மேலும் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஆபாச வீடியோ எடுத்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் காசி மீது பாலியல், பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காசி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பொருளாதாரத்தில் வசதியான இளம் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களை தனது காதல் வலையில் சிக்க வைக்கும் காசி, திருமணம் செய்வதாக கூறி வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
காசி ரகசியமாக எடுக்கும் வீடியோக்களை அவரின் நண்பர்களான டேசன் ஜினோ, தினேஷ், கெளதம் ஆகியோருக்கு அனுப்பிக்கொடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மூன்று நண்பர்களில் கெளதம் மட்டும் குவைத்தில் வேலை செய்துவந்தார்.
கெளதம் வெளிநாட்டிலேயே இருந்ததால் பொலிசில் சிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தான், குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கெளதம் வருவதாக சி.பி.சி.ஐ.டி பொலிசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலையத்தில் அவரை கைது செய்தனர். கைதான கெளதமிடம் பொலிசார் விசாரணை நடத்தும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.