நளினிக்கும் பிணை? கண்ணீருடன் நளினியின் அம்மா பத்மா
கடந்த 32 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று பிணைவழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை மக்கள் மற்றும் பிரபலங்கள் வரவேற்றுள்ள நிலையில், நளினிக்கும் பிணை பெற முடிவு செய்துள்ளதாக அவரது அம்மா பத்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறுகையில், இது உண்மையிலேயே வரவேற்க்கத்தக்க தீர்ப்புதான், இப்ப என் பொண்ணு நளினி பரோலில் வந்திருக்காங்க, எனக்கு 83 வயசு ஆகிட்டதால முன்மாதிரி உடல்நிலை இல்லைங்க.
ரொம்ப மோசமாகிடுச்சி, என் பொண்ணுதான் என்னை பாத்ரூம் கூட்டிட்டு போறாங்க, அவளுக்கு பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.
இப்ப நாங்க வேலூரில் இருக்கறோம், என் பொண்ணு என் பக்கத்திலேயே இருக்கணும்னு மனசு கடந்து துடிக்குது, இதுக்கு மேலேயும் என்னால் அவளை பிரிந்து இருக்க முடியவில்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.