மாறுகிறது கேரளாவின் பெயர்! ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
மாநிலத்தின் பெயரை ‘கேரளா’ என்பதில் இருந்து ‘கேரளம்’ என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மாநில சட்டப்பேரவை ஒரு தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது.
கேரள மாநில சட்டப்பேரவையில் 9வது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது, நேற்று இரண்டாம் நாளில் பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார்.
இன்று அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், இன்றே சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |