ஆசிய விளையாட்டு போட்டி; நக்வியிடம் பதக்கங்களை பெறுமா இந்தியா?
will india accept medal if naqvi gives asian games medals: ஆசிய கிண்ணத்தில் நக்வியிடம் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி, ஆசிய விளையாட்டு போட்டியிலும் பெற மறுக்குமா என கேள்வி எழுந்துள்ளது.
நக்வியிடம் கிண்ணம் பெற மறுத்த இந்தியா
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசியக் கிண்ண கிரிக்கெட் ஆகிய இரண்டிலும், இந்தியா நடப்பு சாம்பியனாக உள்ளது.

ஆனால் பட்டங்களை வென்ற பிறகு நடைபெற்ற அதிகாரப்பூர்வ பரிசளிப்பு விழாவில், பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வி வெற்றி கிண்ணம் வழங்கியதை இரு அணிகளும் பெற்றுக் கொள்ளவில்லை.

பிசிசிஐயின் உத்தரவின் பேரிலே கிண்ணத்தை பெறவில்லை என கூறப்பட்டது.
ஜப்பானில் இன்று தொடங்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, மொஹ்சின் நக்வி பதக்கம் வழங்கினால் இந்தியா பெற மறுக்குமா என கேள்வி எழுந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுமா?
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஐசிசியின் கீழ் செயல்பட்டு வந்தது. ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (OCA) கீழ் நடத்தப்படுகிறது.
OCA விதிகளின்படி, பதக்கங்கள் OCA தலைவரால் வழங்கப்படுகின்றன. அவர் இந்தப் பொறுப்பை மற்ற OCA உறுப்பினர்களுக்கும், தொடர்புடைய சர்வதேச அல்லது ஆசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வழங்கலாம்.

அப்படி ஒரு சூழல் நிகழ்ந்தால் இந்திய அணி பதக்கங்களை பெற்றுக்கொள்ளுமா என பிசிசிஐ தலைவர் செயலாளர் தேவாஜித் சாய்கியா கேட்கப்பட்ட போது, நாங்கள் போட்டிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறோம். அணிகள் முதலில் வெற்றி மேடையை அடைய வேண்டும்.

அந்த நேரத்தில் நிலவும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, அப்போது நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.
OCA விதிகளின்படி, வெற்றி விழாக்களின் போது ஆர்ப்பாட்டங்கள், அரசியல், வணிக, மத அல்லது இனப் பிரச்சாரங்களையும் இந்த வழிகாட்டுதல்களை தடை செய்கின்றன.
OCA விதிகள், விளையாட்டுப் போட்டிகள், பதக்கங்கள், கொடிகள், சின்னங்கள் அல்லது சான்றிதழ்களுக்கு அவமரியாதையாகக் கருதப்படும் செயல்களுக்குத் தண்டனைகளை வழங்குகின்றன.