விண்வெளியில் 7 புதிய கிரகங்களை கண்டுபிடித்த நாசா: வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்
கெப்ளர் தொலைநோக்கி மூலம் 7 புதிய கிரகங்கள் கொண்ட அமைப்பை நாசா கண்டுபிடித்துள்ளது.
புதிய கிரகங்கள்
கெப்ளர்தொலைநோக்கி மூலம் விண்வெளியில் நடத்தப்பட்ட ஆய்வில் 7 புதிய கிரகங்கள் கொண்ட அமைப்பை நாசா கண்டுபிடித்துள்ளது.
இந்த கிரகங்கள் அனைத்தும் சூரியனில் இருக்கும் கிரகங்களை விட அதிக அளவு வெப்பமானவை என்றும், இதற்கு 'கெப்ளர் 385′ எனவும் கூறப்படுகிறது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் அனைத்தும் பூமியை விட 7 மடங்கு பெரியதாகவும், நெப்டியூனை விட சிறியதாகவும் என பல அம்சங்களை கொண்டிருப்பதாக நாசா கூறியுள்ளது.
உயிரினங்கள் வாழ வாய்ப்பு
இந்த கிரகங்களின் அமைப்பானது, பூமியிலிருந்து சுமார் 300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. மேலும், கிரகங்கள் அனைத்தும் தங்களது நட்சத்திரத்தைச் சுற்றி மிக அருகில் சுழல்கின்றன.
மேலும், இந்த மைப்புக்கு நடுவே சூரியனை போல நட்சத்திரம் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இது சூரியனை விட 10 விழுக்காடு பெரியதாகவும், 5 விழுக்காடு அதிக வெப்பமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seven new planets orbiting a distant star have been revealed in a review of @NASAExoplanets data by our retired Kepler Space Telescope: https://t.co/vnJIAkBmjw
— NASA (@NASA) November 2, 2023
All the planets in the system, named Kepler-385, are larger than Earth and smaller than Neptune, and are scorched by… pic.twitter.com/HmJIqBFh5h
இதற்கிடையில், கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா என்பது பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை. இந்த கிரகங்களின் அமைப்பை பற்றி இன்னும் கூடுதல் ஆய்வை நாசா மேற்கொள்ள இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |