விண்வெளியில் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் சுனிதா வில்லியம்ஸ்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புகைப்படம்
நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியதால், விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உடல் நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புகைப்படம்
எட்டு நாட்களில் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா, 150 நாட்களுக்குமேல் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கிவிட்டதால், அவரது உடல் நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னங்கள் ஒட்டி, எலும்பும் தோலுமாய் சுனிதா காணப்படும் புகைப்படம் ஒன்றைக் கண்டு தான் மூச்சடைத்துப்போனதாக தெரிவித்துள்ளார், சுனிதாவின் சக ஊழியரான நாசா ஊழியர் ஒருவர்.
அவரும் நாசாவில் பணியாற்றுபவர் என்பதால், சுனிதாவின் நிலை அவருக்கு நன்றாகத் தெரியும்.
முதல் வேலையாக சுனிதாவின் உடல் நிலையை பழைய நிலைமைக்குக் கொண்டு வந்தாகவேண்டும் என்கிறார் அவர்.
சுனிதாவுக்கு என்ன பிரச்சினை?
சுனிதா விண்வெளிக்குச் செல்லும்போது அவரது உடல் எடை சுமார் 63 கிலோவாக இருந்துள்ளது. அந்த எடையை சீராக பராமரிக்க, அவர் தினமும் 3,500 முதல் 4,000 கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த அளவு குறையும்போது, உடல் எடை வேகமாக குறைந்துவிடும் என்கிறார் சுனிதாவின் சக நாசா பணியாளர்.
இன்னொரு விடயம் என்னவென்றால், விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருக்கும்போது, அவர்களுடைய எலும்புகளையும் தசையையும் வலிமையாக வைத்துக்கொள்வதற்காக தினமும் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக உடற்பயிற்சி செய்யவேண்டும்.
விண்வெளிக்குச் செல்லும் பெண்களுக்கு, உடற்சிதைமாற்றம் காரணமாக (metabolism) ஆண்களைவிட வேகமாக தசை இழப்பு ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஆக, சுனிதாவின் உடல் நலம் மீது கவனம் செலுத்திவருவதாக நாசா செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |