வானில் இருந்து விழுந்த மர்மப்பொருள் - புளோரிடாவில் நிகழ்ந்த சம்பவத்திற்கு பதில் கூறிய நாசா
புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதிய கனமான அந்த பொருள், சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) ஒரு பகுதி என்பதை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) உறுதிப்படுத்தியுள்ளது.
விண்ணில் இருந்து விழுந்த அந்த பொருள்
கென்னடி விண்வெளி மையத்தில் மாதிரியை ஆய்வு செய்த பின்னர், வீட்டின் மேல் விழுந்த அந்த உலோகப் பொருள் மார்ச் 2021 இல் சுற்றுப்பாதை புறக்காவல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது என நாசா தெரிவித்துள்ளது.
1.6lb (0.7kg) எடைக்கொண்ட உலோகப் பொருளானது பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்த பிறகு வீட்டின் கூரையை கிழித்துக்கொண்டு விழுந்துள்ளது.
புதிய லித்தியம் (lithium) மற்றும் அயன் பேட்டரிகள் (ion batteries) நிறுவப்பட்ட பின்னர் விண்வெளி நிலையத்தால் வெளியேற்றப்பட்ட சுமார் 5,800 பவுண்டுகள் வன்பொருளின் ஒரு பகுதியாக இந்த பொருள் இருப்பதாக நாசா கூறியுள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி அன்று பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது வன்பொருள் முழுமையாக எரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்ததாகவும், அதில் இருந்து ஒரு வன்பொருள் உயிர் பிழைத்து, புளோரிடாவின் நேபிள்ஸில் உள்ள ஒரு வீட்டை தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வு
அந்த வீட்டில் வசித்து வந்தவரின் மகன் இந்த தாக்கத்தின் காரணமாக காயம் அடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் இருந்து வெளியேறும் குப்பைகள் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி வந்துக்கொண்டே இருக்கிறது.
கலிபோர்னியாவில் உள்ள வான கண்காணிப்பாளர்கள் இரவு வானத்தில் மர்மமான தங்கக் கோடுகள் நகர்வதை பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்கள்.
இது பற்றி ஆராய்ந்த அமெரிக்க அதிகாரிகள், சீன ராக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் மீண்டும் நுழைந்ததன் காரணமாக இந்த ஒளி ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு குறித்து சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) விரிவான விசாரணையை நடத்தும் என நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |