அண்டார்டிகாவில் பிரகாசிக்கும் நீல ஒளி - மர்மத்தை கண்டுபிடித்த நாசா
அண்டார்டிகாவில் பிரகாசமாக ஒளிரும் நீல ஒளியின் மர்மத்தை NASA விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
நாசாவின் செயற்கைக்கோள்கள் கடந்த 20 ஆண்டுகளாக அண்டார்டிகா அருகில் தெற்கு பெருங்கடலில் ஒரு விசித்திரமான நீல நிற ஒளியை கண்டறிந்தன.
இந்த நீல ஒளி கடலின் சில பகுதிகளில் அதிமாக பிரகாசிப்பது கண்டறியப்பட்டது. ஆனால், இந்த ஒளியின் காரணம் விஞ்ஞானிகளுக்கு புதிராக இருந்தது.
இந்நிலையில், அதன் மர்மத்தை நாசா விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வின்படி, இந்த நீல ஒளிக்கு Silica நிறைந்த Diatoms மற்றும் Calcium Carbonate கொண்ட Coccolithophores எனும் இரண்டு வகையான உயிரணுக்களின் கலவை தான் காரணம் என கண்டறிந்துள்ளனர்.
Coccolithophores-ன் வெளிப்புற சில்லுகள் ஒளியை பிரதிபலிக்கின்றன - இது Great Calcite Belt எனப்படும் பகுதியை உருவாக்குகிறது.
தெற்கு பகுதியில் Coccolithophores வாழ முடியாத குளிர்ந்த நீரில் கூட இந்த ஒளி பிரகாசிப்பது ஒரு புதிராக இருந்தது.
Oceanographer Barney Balch தலைமையில் R/V Roger Revelle என்ற கப்பலில் 60 டிகிரி அட்சரேகையில் ஆய்வாளர்கள் ஆய்வுப்பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் கடலின் மேற்பரப்பில் மட்டுமால்லாமல், கடலின் ஆழங்களிலும் நீரின் நிறம், ஒளி பிரதிபலிப்பு உயிரியல் மற்றும் கனிம அமைப்புகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வானது Global Biochemical Cycles என்ற ஆய்விதழில் வெளியானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
NASA Antarctica Glow Mystry, NASA Antarctica Discovery, Strange Glow new Antarctica, Coccolithophore and Diatoms