சர்வதேச விண்வெளி நிலையத்தை கடலில் வீச உள்ள நாசா - என்ன காரணம்?
சர்வதேச விண்வெளி நிலையம் பசுபிக் பெருங்கடலில் வீசப்பட்ட உள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம்
விண்வெளி ஆய்வுக்காக விண்வெளிக்கு செல்லும் அனைவரும், அங்குள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில்(ISS) தங்கி ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இந்த சர்வதேச விண்வெளி நிலையம் கடந்த 20 நவம்பர் 1988 ஆம் ஆண்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் ஆகியவற்றின் விண்வெளி ஆய்வு நிலையங்கள் இணைந்து இதை உருவாக்கியுள்ளது.
இதுவரை, பல நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கி பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் விலை உயர்ந்த பொருளாக இது கருதப்படுகிறது.
150 பில்லியன் டொலர் மதிப்பில் இது கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதனை பராமரிக்க ஆண்டுக்கு 3 பில்லியன் டொலர் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
பசுபிக் கடலில் விழும்
இந்நிலையில், நாசா அதனை பசிபிக் பெருங்கடலில் விழ வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 2031 ஆம் ஆண்டில் அதன் ஆயுட்காலம் முடிவடைய உள்ளது. அதன் தொகுதிகள் சேதமடைந்தது வருவதால், பராமரிப்பு செலவு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்வெளி சுற்றுப்பாதையில் இருந்து அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜனவரி 2031 ஆம் ஆண்டு, De-orbit வாகனம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி, அதனை இயற்கை முறையில் சிதைவடைய செய்து, பின்னர் பசிபிக் பெருங்கடலில் உள்ள பாயிண்ட் நெமோவில் விழ உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |