290 மில்லியன் கிமீ தொலைவிலிருந்து பூமியை படம்பிடித்த Psyche விண்கலம்
NASA-வின் Psyche விண்கலம் 290 மில்லியன் கிலோமீற்றர் தொலைவிலிருந்து பூமியை படம்பிடித்த்துள்ளது.
2023 அக்டோபரில் நாசா ஏவிய Psyche விண்கலம், தற்போது Psyche என்ற உலோக சிறுகோளை அடையும் பயணத்தில் பாதியில் உள்ளது.
இந்த விண்கலம் 2025 ஜூலை மாதத்தில் பூமி மற்றும் சந்திரனை 290 மில்லியன் கிலோமீற்றர் (180 மில்லியன் மைல்) தொலைவில் இருந்து படம் பிடித்துள்ளது.
இந்த படங்கள் விண்கலத்தின் அறிவியல் கருவிகளை சோதிக்கவும், அவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன.
Psyche விண்கலத்திலுள்ள Twin Multispectral Imagers என்ற காமெராக்கள் 10 வினாடிகள் வரை Long Exposure கொண்ட படங்களை எடுத்துள்ளன.
அந்த படங்களில் பூமி மற்றும் சந்திரன், Aries நட்சத்திர குழுவின் பின்னணியில் ஒளிரும் புள்ளிகளாக தெரிகின்றன. அந்த புகைப்படங்களை NASA வெளியிட்டுள்ளது.
இந்த சோதனைகள் Psyche கிரகத்தின் மேற்பரப்பை விரிவாக ஆய்வு செய்யும் முக்கிய பணிக்கான முன்னோட்டமாகும்.
இதுவரை 1.6 பில்லியன் கிலோமீற்றர் பயணித்துள்ள Psyche விண்கலம், நம் சூரிய குடும்பத்தின் தொடக்க காலத்தைப் பற்றிய ரகசியங்களைத் திறக்க்கும் முயற்சியில் முன்னேறிவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
NASA Psyche spacecraft, Earth and Moon image, Psyche asteroid mission, Deep space photography, NASA space exploration, Psyche mission 2025, Multispectral imager NASA