Wow... முதல்முறையாக பந்து வீச்சில் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடி நாதன் லயன் மாபெரும் சாதனை!
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பந்து வீச்சில் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடி நாதன் லயன் மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
நாதன் லயன் மாபெரும் சாதனை
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி அங்கு சென்று விளையாடி வருகிறது.
இப்போட்டியில் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை தோற்கடித்தது. இன்று 2-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் நாதன் லயன் படைத்திருக்கிறார். இந்த 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் 5 பேர்தான்.
அதுவும் அந்த 5 பேரும் பேட்ஸ்மேன்கள்தான். அந்த பட்டியலில் முதல்முறையாக பந்து வீச்சாளர் நாதன் லாயன் 6-வதாக இடம் பிடித்து பெருமைப்பெற்றுள்ளார். இப்பட்டியலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் 4-வது இடத்தில் உள்ளார்.
Nathan Lyon is all set to play his 100th consecutive test??#NathanLyon #Ashes2023 #Tests #Cricket #SBM pic.twitter.com/hWsfu9jULX
— SBM Cricket (@Sbettingmarkets) June 25, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |