ரஷ்யாவின் புதிய அணு சக்தி கொண்ட Burevestnik ஏவுகணை - NATO எச்சரிக்கை
ரஷ்யாவின் புதிய அணு சக்தி கொண்ட Burevestnik ஏவுகணை குறித்து NATO அச்சம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா தனது Burevestnik (SSC-X-9 Skyfall) அணு சக்தி கொண்ட க்ரூஸ் ஏவுகணையின் மேம்பாட்டை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஏவுகணை, அணு ரியாக்டர் மூலம் இயக்கப்படுவதால், வரையற்ற தூரம் பறக்கும் திறன் கொண்டதாக NATO மதிப்பீடு செய்துள்ளது.
NATO-வின் ரகசிய ஆவணத்தில், இந்த ஏவுகணை 900 கிமீ/மணி வேகம், உயர் இயக்கத்திறன் மற்றும் மொபைல் பிளாட்ஃபார்ம்களில் இருந்து ஏவப்படும் திறன் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மூன்று வாரங்களுக்கு முன் இந்த ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவித்தார்.
இந்த ஏவுகணை, தெற்கு மற்றும் துருவப் பகுதிகள் வழியாக நீண்ட, சிக்கலான பாதைகளை எடுத்து, NATO-வின் வான்வழி பாதுகாப்புகளை தவிர்க்கும் திறன் கொண்டது. இதனால், ஐரோப்பாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு சவாலாக இருக்கும் என NATO எச்சரித்துள்ளது.
ஆனால், சில நிபுணர்கள், இது ஹைபர்சோனிக் வேகம் அடையாததால், நீண்ட நேரம் வானில் பறக்கும் போது தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் எனக் கூறுகின்றனர்.
பிரித்தானியா அறிவிக்கவுள்ள புதிய புகலிட கொள்கை., குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
மேலும், NATO ஆவணத்தில், ரஷ்யாவின் புதிய SS-X-28 Oreshnik நடுத்தர தூர ஏவுகணை, 5,500 கிமீ தூரம் தாக்கும் திறன் கொண்டதாகவும், பெலாரஸில் 2025 டிசம்பரில் நிறுவப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, Poseidon அணு சக்தி கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ட்ரோன் 2030-க்குள் செயல்பாட்டுக்கு வரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில நிபுணர்கள், Burevestnik-ஐ “பயனற்ற மற்றும் ஆபத்தான ஆயுதம்” என விமர்சிக்கின்றனர். 2019-ல் நடந்த சோதனையில், ஐந்து விஞ்ஞானிகள் உயிரிழந்ததும், கதிர்வீச்சு அளவு அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த முன்னேற்றம், ஐரோப்பாவின் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் என NATO வலியுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia Burevestnik nuclear missile 2025, NATO alarmed by Skyfall SSC-X-9, Putin announces Burevestnik missile test, Russia unlimited range nuclear cruise missile, NATO defense challenges Burevestnik threat, SS-X-28 Oreshnik missile Belarus deployment, Poseidon nuclear submarine drone NATO concern, Russia vs NATO nuclear weapons race, Europe security risk Russian missile, Flying Chernobyl nuclear reactor missile