உக்ரைன் கையில் ரஷ்ய நகரங்கள்! தாக்குதல் பின்னணியில் நேட்டோ மற்றும் மேற்கு நாடுகள்
நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனின் சமீபத்திய தாக்குதலுக்கு உதவி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
முன்னேறும் உக்ரைனிய படைகள்
உக்ரைனிய படைகள் கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைனிய எல்லையை கடந்து ரஷ்யாவுக்குள் புகுந்து Kursk பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
உக்ரைனிய படைகளின் இந்த அதிரடி தாக்குதல் மூலம் பல மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 200000 ரஷ்ய மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, உக்ரைனிய படைகள் Kursk பிராந்தியத்தில் உள்ள Sudzha நகரை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பின்னணியில் நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள்
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மிக நெருங்கிய உதவியாளரான Nikolai Patrushev, Kursk பகுதி மீது உக்ரைனின் நடத்தியுள்ள இந்த தாக்குதலின் பின்னணியில் நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் உக்ரைனின் இந்த தாக்குதல் குறித்து முன் விவரங்கள் இல்லை என்று வாஷிங்டன் கூறுவது மிகப்பெரிய பொய் என்று ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நிகோலாய் பட்ருஷேவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் Kursk பகுதி மீதான தாக்குதலில், நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்புடன் இது திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |