கலைந்த ஒலிம்பிக் பதக்க கனவு! விரக்தியில் வினேஷ் போகத் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம்!
ஒலிம்பிக் பதக்க கனவு கைநழுவிய நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்ஸ்டாகிராமில் விரக்தியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கைநழுவிய ஒலிம்பிக் பதக்கம்
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கடைசி நிமிடத்தில் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் குறைந்தப்பட்சம் உறுதிசெய்யப்பட்ட வெள்ளிப் பதக்கத்தையாவது தனக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் இதனை விசாரணை செய்த நடுவர் மன்றம், கடந்த 14ம் திகதி வினேஷ் போகத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இருப்பினும் 15 நாட்களுக்கு மீண்டும் மனு செய்யப்படும் என வினேஷ் போகத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
விரக்தியில் வினேஷ் போகத்
இந்நிலையில், ஒலிம்பிக் பதக்க கனவு கைநழுவிய வருத்தத்தில், வினேஷ் போகத் இன்ஸ்டாகிராமில் விரக்தியில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில், வினேஷ் போகத் தனது நெற்றியில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு ஆடுகளத்தில் சாய்ந்திருப்பதை பார்க்க முடிகிறது.
இது விரக்தியின் வெளிப்பாடு போல் இருப்பதால், இணையவாசிகள் பலரும் அந்த பதிவுக்கு கீழே கமெண்ட்டில் “எப்போது நீங்கள் சாம்பியன்” “மகளே கலங்காதே” என ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |