இஸ்ரேலின் பொய்யான வெற்றி அறிவிப்பு: அவர் இன்னும் கொல்லப்படவில்லை! ஹமாஸ் முக்கிய தகவல்
ஹமாஸ் ஆயுதப் படையின் தளபதி முகமது டெய்ஃப் இன்னும் உயிருடன் இருப்பதாக இயக்கத்தின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் வழங்கிய முக்கிய தகவல்
ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான ஒசாமா ஹம்தான்(Osama Hamdan) சமீபத்தில் AP செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில், Izz al-Din al Qassam படையின் தலைவர் முகமது டெய்ஃப்(Mohammed Deif) நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜூலை 13ம் திகதி நடத்திய வான் தாக்குதலில் முகமது டெய்ஃப் உயிரிழந்து விட்டதாக இஸ்ரேல் ஆகஸ்ட் 1ம் திகதி அறிவித்து இருந்த நிலையில், முதல் முறையாக மூத்த ஹமாஸ் அதிகாரி இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு பதிலளித்துள்ளார்.
ஜூலை 13ம் திகதி இஸ்ரேல் நடத்திய படுகொலையை நியாப்படுத்துவதற்காக முகமது டெய்ஃப்-யை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று இஸ்ரேல் கூறியதாக ஒசாமா ஹம்தான் அதில் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினத்தில் மனிதாபிமான மண்டலம் என்று அழைக்கப்படும் தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 88 பாலஸ்தீனியர்கள் வரை கொல்லப்பட்டனர்.
சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கான் யூனிஸில் அல்-மவாசி மாவட்டத்தில் புலம்பெயர்ந்த மக்கள் வசித்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 289 பேர் வரை காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய்யான தகவல்கள்
இதற்கிடையில் ஜூலை 13ம் திகதி காசாவில் ஹமாஸின் துணை தலைவர் Khalil al-Hayya செய்தியாளர்களிடம் வழங்கிய தகவலில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொய்யான வெற்றியை அறிவித்து வருவதாக தெரிவித்து இருந்தார்.
மேலும், உங்களின் பொய்யான தகவல்களையும், காலியான அறிக்கைகளையும் முகமது டெய்ஃப் பார்த்து கேலி செய்து வருவதாக Khalil al-Hayya தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |