பின்லாந்து, ஸ்வீடனுக்கு புடின் எச்சரிக்கை!
பின்லாந்து மற்றும் ஸ்வீடனில் நேட்டோ அதன் ராணுவ உள்கட்டமைப்பை விரிவாக்குவது ரஷ்யாவிடமிருந்து எதிர்வினை தூண்டக்கூடும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைநகர் மாஸ்கோவில் நடந்த ரஷ்யா தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் (CSTO) உச்சிமாநாட்டில் நேட்டோ விரிவாக்கம் குறித்து பேசிய போது புடின் இவ்வாறு கூறினார்.
மாநாட்டில் புடின் கூறியதாவது, பின்லாந்து மற்றும் ஸ்வீடனுடன் ரஷ்யாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் தங்கள் பிராந்தியத்தில் ராணுவ உள்கட்டமைப்பை விரிவாக்குவது ரஷ்யாவிடமிருந்து எதிர்வினை தூண்டக்கூடும் என்று கூறினார்.
உக்ரைனுக்குள் நுழைய முயன்ற ரஷ்ய துருப்புகளை தெறித்து ஓட வைத்த உக்ரேனிய வீரர்கள்!
இது ரஷ்யாவிற்கு ஒரு பிரச்சனை என்றும் அமெரிக்காவின் விருப்பதின் அடிப்பைடையில் உள்ளது என்றும் கூறினார்.
உலகளாவிய செல்வாக்கை அதிகரிப்பதற்கான நேட்டோவின் திட்டங்களில், ரஷ்யா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என புடின் தெரிவித்துள்ளார்.