ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க நேட்டோ போர் விமானங்கள் தயார்: அதிகரிக்கும் அச்சம்
உக்ரைன் மின் நிலையங்கள் மீது ரஷ்யா சரமாரியாக தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நேட்டோ படைகள் பதிலடி கொடுக்கத் தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ போர் விமானங்கள் தயார்
ரஷ்ய ஜனாதிபதி புடின், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களைக் கொண்டு உக்ரைன் மின் நிலையங்கள் மற்றும் ராணுவ அமைப்புகள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளார்.
அதன் விளைவாக, உக்ரைன் தலைநகர் கீவ்வில் பல இடங்களின் மின்தடை ஏற்பட்டுள்ளது. பண்டிகைக்காலத்தில் பொதுமக்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுக்க நேட்டோ அமைப்பின் போர் விமானங்கள் தயாராகிவருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
போலந்து நாட்டிலும், கிழக்கு பகுதியிலுள்ள நேட்டோ எல்லையிலும் போர் விமானங்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், போர் பெரிய அளவில் வெடிக்குமோ என்ற அச்சம் அதிகரித்துவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |