எஸ்டோனியாவிற்குள் அத்துமீறி நுழைந்த ட்ரோன்: சுட்டு வீழ்த்திய நேட்டோ போர் விமானம்
எஸ்டோனியாவிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத ட்ரோனை நேட்டோ போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
அத்துமீறி நுழைந்த ட்ரோன்
அடையாளம் தெரியாத ட்ரோன் ஒன்று எஸ்டோனிய வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தது.
இதையடுத்து நேட்டோவின் பால்டிக் வான்வழி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ருமேனிய F-16 போர் விமானம் துரிதமாக செயல்பட்டு அத்துமீறி நுழைந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியது.
The downing of a drone that entered Estonian airspace proves one thing clearly: @NATO works.
— Margus Tsahkna (@Tsahkna) May 19, 2026
Romanian F-16s responded immediately from Šiauliai, demonstrating that Allies stand united and ready to defend every inch of NATO territory.
Grateful to Romania and all our NATO…
இது தொடர்பாக எஸ்டோனிய ராணுவம் வெளியிட்ட தகவலில், செவ்வாய்க்கிழமை மதியம் 12:00 மணியளவில் ரஷ்ய எல்லை பகுதியில் இருந்து நாட்டின் தென்கிழக்கு பகுதிக்குள் ட்ரோன் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது.
இதையடுத்து வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ருமேனிய F-16 போர் விமானம் அடையாளம் தெரியாத ட்ரோனை மதியம் 12.14 மணியளவில் ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தியது.
பொதுமக்கள் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ட்ரோன் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ விளக்கம்

லிதுவேனியாவை தளமாக கொண்டு செயல்படும் நேட்டோ படைகள் இந்த ட்ரோன் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் எந்தவொரு திடீர் வான்வழி அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நேட்டோ படைகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |