நோட்டோவின் உறுப்பினராக உக்ரைனை அழைக்க வேண்டும்: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படை
ஜூலை உச்சிமாநாட்டில் நோட்டோ உக்ரைனை உறுப்பினராக சேர அழைக்க வேண்டும் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரைன் சுற்றுப்பயணம்
உக்ரைனிய தலைநகர் கீவ்-விற்கு நேட்டோ பொதுச் செயலாளர் ஸ்டோல்டன்பெர்க் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் உக்ரைனில் இருந்த போது புச்சாவுக்குச் சென்று ரஷ்ய அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இதற்கிடையில் உக்ரைனிய தலைவர் ஜெலென்ஸ்கி உடன் கீவ்வில் நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நோட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க், நோட்டோவில் உக்ரைனுக்கான சரியான இடம் உள்ளது என்று தெரிவித்தார்.
sky news
மேலும் இதனை சாத்தியமாக்க எங்கள் ஆதரவு உங்களுக்கு உதவும் என்றும், நேட்டோ இன்றும், நாளையும், எத்தனை காலம் இதற்கு எடுக்கும் என்ற போதும் உங்களுடன் நிற்கும் என்று ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார்.
அத்துடன் ஜூலை மாதம் வில்னியஸில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டிற்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கலந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பு விடுத்தார்.
உக்ரைனை உறுப்பினராக அழைக்க வேண்டும்
இந்நிலையில் ஜூலை உச்சிமாநாட்டிற்கு நேட்டோ உக்ரைனை உறுப்பினராக அழைக்க வேண்டும் என்றும், இந்த வருகையின் போது நோட்டோவில் செருவதற்கான காலக்கெடுவை உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Sky News
மேலும் உச்சிமாநாட்டிற்கு வருவதற்கான அழைப்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஆனால் உக்ரைன் அதற்கான அழைப்பை பெறுவதும் முக்கியம் என்று கூட்டு செய்தி மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, உக்ரைனை கூட்டணிக்கு அழைப்பதற்கான அரசியல் முடிவுக்கு ஒரு புறநிலை தடையும் இல்லை, இப்போது நேட்டோ நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்களும், பெரும்பான்மையான உக்ரைனியர்களும் நேட்டோ அணுகலை ஆதரிக்கும் போது, அதற்கான முடிவுகளுக்கான நேரம் இது." என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
Roman Chop via AP