உக்ரைன் கோரிக்கையை நிராகரித்த நேட்டோ!
உக்ரைன் வான்வெளியை மூட வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நேட்டோ நிராகரித்துள்ளது.
உக்ரைன் வான்வெளியை நேட்டோ அமைப்பு மூட வேண்டும், முடியாவிட்டால் உக்ரைனு்ககு விமானங்களை வழங்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் பிரஸ்ஸல்ஸில் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசுய நேட்டோ பொதுச்செயலாளர் jens Stoltenberg, உக்ரைனுக்கான ஆதரவை மேலும் அதிகரித்து வருகிறோம், ஆனால் நேரடியாக தலையிடுவது ஐரோப்பிய அளவிலான போருக்கு வழவகுக்கும் என கூறினார்.
உக்ரைனுக்கு வரவிருக்கும் நாட்கள் இன்னும் மோசமாக இருக்கும், அதிக மரணம், அதிக துன்பம் மற்றும் அதிக அழிவு ஏற்படும் என எச்சரித்தார்.
உக்ரைன் மீதான தாக்குதல்கள் தொடர்வதால், ரஷ்யா இன்னும் மோசமான ஆயுதங்களை கொண்டு வர வாய்ப்புள்ளது.
உக்ரைனில் நடக்கும் போர் புடினின் போர் என்று Stoltenberg வலியுறுத்தினார்.
இந்தப் போரை உடனடியாக நிறுத்துமாறும், உக்ரைனில் இருந்து தனது அனைத்துப் படைகளையும் நிபந்தனைகள் இன்றி விலக்கிக் கொள்ளுமாறும், தூதரக முயற்சியில் இப்போது ஈடுபடுமாறும் ஜனாதிபதி புட்டினை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நேட்டோ இந்த மோதலின் ஒரு அங்கமாக இல்லை, ஆனால் உக்ரைனுக்கு அப்பால் மற்ற நாடுகளுக்கு இந்த மோதல் தீவிரமடையாமல் மற்றும் பரவாமல் இருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு உள்ளது.
அப்படி நடந்தால் அது இன்னும் பேரழிவு மற்றும் ஆபத்தானது என்று jens Stoltenberg கூறினார்.