இவர்கள் ரஷ்யாவின் அடுத்த இலக்கு... கடும் எச்சரிக்கை விடுத்த நேட்டோவின் ரூட்
ரஷ்யா நடத்தும் போரைத் தடுக்க பாதுகாப்பு முயற்சிகளை முடுக்கிவிடுமாறு நேட்டோ தலைவர் மார்க் ரூட் நேட்டோ உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
உறுப்பு நாடுகள் உணரவில்லை
ரஷ்யாவின் போரானது நம் தாத்தா பாட்டி மற்றும் கொள்ளு தாத்தா பாட்டி ஆகியோர் எதிர்கொண்ட போரின் அளவாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெர்லினில் உரையாற்றிய அவர், ஐரோப்பாவில் ரஷ்யாவின் அச்சுறுத்தலின் அவசரத்தை நேட்டோ உறுப்பு நாடுகள் பல உணரவில்லை என்றும், கடந்த தலைமுறையினர் கண்ட அளவிலான போரைத் தடுக்க பாதுகாப்புச் செலவுகளையும் உற்பத்தியையும் விரைவாக அதிகரிக்க வேண்டும் என்றும் ரூட் அறிவுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாம்தான். அதிகமானோர் அமைதியாக மெத்தனமாக இருப்பதாக நான் அஞ்சுகிறேன். அதிகமானோர் அவசரத்தை உணரவில்லை.
மேலும் அதிகமானோர் காலம் நம் பக்கம் இருப்பதாக நம்புகிறார்கள். அது இல்லை. நடவடிக்கைக்கான நேரம் இது என்றும் ரூட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும், போர் நம் வாசலில் உள்ளது. ரஷ்யா ஐரோப்பாவில் மீண்டும் போரை கொண்டு வந்துள்ளது. நாம் தயாராக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரஷ்யா இந்தக் கூட்டணியை நேரடி மோதலில் ஈடுபடுத்தக்கூடும் என்றும் ரூட் தெரிவித்துள்ளார்.
போரின் யதார்த்தம்
இதனிடையே, ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா, உக்ரைனில் உள்ள எந்தவொரு ஐரோப்பிய படைவீரரும் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதப்படுவார்கள் என்றார்.
இந்த நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போரின் யதார்த்தம் அதிகரித்து வருவதால், நமது குழந்தைகளை இழக்க நாடு தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்சின் உயர் தளபதி சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவை கடுமையாக விமர்சிக்கும் நிலை உருவானதை அடுத்தே ரூட் ரஷ்யா தொடர்பில் தமது கருத்தை முன்வைத்துள்ளார். ஐரோப்பாவை ட்ரம்ப் விமர்சித்துள்ளதை ரஷ்யா வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |