வீரர்களை திரும்ப பெறும் அமெரிக்கா: ஐரோப்பிய நாடுகளுக்கு பாதிப்பு இல்லை: நேட்டோ உறுதி
வெளியேறும் அமெரிக்க படைகளின் காரணமாக ஐரோப்பாவின் பாதுகாப்பு திட்டங்களில் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என நேட்டோ தெரிவித்துள்ளது.
படைகளை திரும்ப பெறும் அமெரிக்கா
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைக்கு ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் போதிய ஆதரவு வழங்காததை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மேலும் ஐரோப்பாவிலிருந்து 4000 முதல் 5000 வீரர்களை திரும்ப பெற போவதாகவும் டிரம்ப் அறிவித்து இருந்தார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு பாதிப்பு இல்லை
இந்நிலையில் வெளியேறும் அமெரிக்க படைகளின் காரணமாக ஐரோப்பாவின் பாதுகாப்பு திட்டங்களில் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
வெளியேறும் வீரர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுபவர்கள் என்றும், அவர்கள் நிரந்தரமாக தங்கி இருக்கும் வீரர்கள் இல்லை என்றும் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே விளக்கியுள்ளார்.
மேலும் இவை நேட்டோவின் பாதுகாப்பு திட்டத்தில் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக நேட்டோ கூட்டணியின் நீண்ட கால பாதுகாப்பு நிலைத்தன்மை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நேட்டோ உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தற்போதைய பாதுகாப்பு முன்னுரிமை ஆசியாவை நோக்கி திரும்பி இருப்பதாகவும், இந்த திட்டத்தை பத்தாண்டுகள் மேலாக அமெரிக்கா கொண்டு இருப்பதாகவும் ரூட்டே குறிப்பிட்டு பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |