அடுத்த ஆண்டு லிதுவேனியா...நோட்டோ உச்சி மாநாட்டில் தகவல்
அடுத்த ஆண்டிற்கான நோட்டோவின் உச்சி மாநாடு கிழக்கு நட்பு நாடான லிதுவேனியாவில் வைத்து நடைபெறும் என நோட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஸ்டோல்டன்பெர்க் தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானிய, கனடா, ஜெர்மனி, மற்றும் துருக்கி ஆகிய 30 நாடுகளை உறுப்பு நாடுகளாக கொண்ட வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) அதாவது மேற்கத்திய நட்பு நாடுகளின் ராணுவ மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பின் வருடாந்திர சந்திப்பு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ( Madrid) நேற்று தொடங்கியது.
இதில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் மற்றும் நோட்டோ உறுப்பு நாடுகளுக்கான பிற அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி இருந்தன.
NATO summit 2023 to be held in Lithuania
— NEXTA (@nexta_tv) June 30, 2022
According to Jens Stoltenberg, next year's NATO summit will take place on eastern flank of alliance.
"We will meet again next year at the NATO summit in Vilnius, Lithuania," Stoltenberg said at the conclusion of NATO summit in Madrid. pic.twitter.com/nd1JsyAqLw
நேற்று தொடங்கிய இந்த உச்சி மாநாடானது வியாழன்கிழமையான இன்று நிறைவடைந்துள்ள நிலையில், இதன் இறுதி உறையில் பேசிய நோட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஸ்டோல்டன்பெர்க், அடுத்த ஆண்டிற்கான நோட்டோ உச்சி மாநாடு கிழக்கு நட்பு நாடான லிதுவேனியாவில் வைத்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய கோதுமை: உக்ரைன் நிலைகுறித்து ஐ.நாவில் கவலை!
இதுத் தொடர்பாக ஸ்டோல்டன்பெர்க் மாநாட்டில் வெளியிட்ட கருத்தில், அடுத்த ஆண்டு லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் மீண்டும் சந்திப்போம் எனத் தெரிவித்து இருந்தார்.